உலகில் எந்த மொழியானாலும் ஒரு மொழியின் மூலம் சொற்களே (Words) ஆகும். ஒரு மொழியில் புழங்கும் சொற்களை வைத்தே அது எம்மொழி என அறிய முடிகிறது. சொற்கள் எனும் போது சொற்களின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. பெயர்களை அல்லது பொருற்களை குறிப்பதற்கான சொற்கள் பெயர்சொற்கள் என்றும், வினையை விவரிப்பதற்கான சொற்கள் வினைச்சொற்கள் என்றும், பொருற்களின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் பெயரெச்சங்கள் என்றும், வினையின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் வினையெச்சங்கள் என்றும், ஒருவரின் அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிப் பேசுவதற்கான சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என்றும், வாக்கியங்களை அல்லது சொற்களை இணைப்பதற்கு இடையே பயன்படும் சொற்கள் இணைப்புச்சொற்கள் என்றும், பேசும் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் “பேச்சின் கூறுகள்” என்று அழைக்கப்படுகின்றது. சிலர் “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.
ஆங்கிலத்தில் பேச்சின் கூறுகளை எட்டாக வகைப்படுத்தியுள்ளனர். அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.
ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)
Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்
மேலதிக விளக்கங்களை கீழே பாருங்கள்.
Nouns – பெயர்சொற்கள்
பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக:
Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்
He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும் >>>
Verbs – வினைச்சொற்கள்
வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக:
Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ
I do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>
Adjectives – பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்
ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சங்ளாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
Red - சிகப்பு
Yellow - மஞ்சள்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான
She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும் >>>
Adverbs – வினெயெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்
வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக
Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>
Pronouns – சுட்டுப்பெயர்கள் / பிரதிப்பெயர்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள்
ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக:
He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை
Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும் >>>
Prepositions – முன்னிடைச்சொற்கள்
ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக:
in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து
Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும் >>>
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.
எடுத்துக்காட்டாக:
and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்
I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும் >>>
Interjections - வியப்பிடைச்சொற்கள்
பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக:
Wow!
Ha!
Hi!
hello!
Oh!
Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும் >>>
Eight Parts of Speech in a Sentence
ஆங்கில மொழியின் பிரதானப் பேச்சின் கூறுகள் எட்டும் ஒரே வாக்கியத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக பார்க்கலாம்.
Sarmilan goes to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.
Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun VerbPreposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.
Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun AdjectiveNoun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.
Wow! Sarmilan and his little sister go toschool happily. (All Eight Parts of Speech)
Interjection Noun Conjunction PronounAdjective Noun Verb Preposition NounAdverb
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்
Thank you very Much Sir it is very helpful for the promotion of Tamil Language. மிக்க நன்றி God bless you. 🙏🙏🙏
ReplyDelete