Wednesday, 27 September 2017

விஜயதசமியில் சூடுபிடிக்கும் ’அட்மிஷன்


Home
: விஜயதசமியை முன்னிட்டு, உரிமம் இல்லாத மழலையர் பள்ளிகளில் நடக்கும், அட்மிஷன் நடைமுறைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில்,197 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இதில், 77 பள்ளிகள் மட்டுமே, முறையாக உரிமத்தை புதுப்பித்துள்ளன. மற்ற பள்ளிகள், அங்கீகாரம் பெற்று புதுப்பிக்காமலும், அங்கீகாரமின்றியும் இயங்குகின்றன.
இம்மழலையர் பள்ளிகளுக்கு, 43 வகை வரன்முறைகளை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இவை முழுமையடையும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்குள் உரிமம் வழங்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் தீ விபத்துக்கு பின், மழலையர் பள்ளிகளுக்கான உரிமம் சார்ந்த நடைமுறைகள், கராறாக பின்பற்றப்பட்டன. ஆனால், சில மாவட்டங்களில், சங்கங்களின் நெருக்கடியாலும், அதிகாரிகளின் மெத்தனத்தாலும், உரிமம் வழங்கும் நடைமுறைகளில், சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே, மழலையர் பள்ளிகளை, ஒழுங்குப்படுத்தும் பணிகள் மெத்தனமாகவே நடக்கின்றன. இப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய, ஏ.இ.இ.ஓ., பணியிடை பயிற்சிக்கு செல்வதால், கோப்புகள் நகராமல் தேங்கி கிடப்பதாக, தனியார் பள்ளி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இச்சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சிலர் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத, ஓட்டு கட்டடங்களில், பெயர் பலகையை மட்டும் தொங்கவிட்டு, வகுப்பு நடத்துகின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெற்றோரும் இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். தற்போது விஜயதசமி முன்னிட்டு, அனைத்து மழலையர் பள்ளிகளும், மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. அடிப்படை வசதிகளற்ற பள்ளிகளில், சேர்க்கை நடக்காமலிருக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ’அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் எவை என்ற தகவலை, கல்வித்துறை வெளியிட வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளின்றி இயங்கும் பள்ளிகளை மூடுவதன் மூலம், பெற்றோர் விழிப்படைவர்.
’கல்வியாண்டு துவங்கி மூன்று மாதங்கள் முடிந்த நிலையிலும், இப்பணிகள் மேற்கொள்ளாமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், ஆய்வுப்பணிகளை துவக்கினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...