Tuesday, 12 September 2017

ம.பி. பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும்போது யெஸ் சாருக்கு தடை- ஜெய்ஹிந்த் சொல்ல உத்தரவு

 மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என மாணவர்கள் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Madhya Pradesh students to answer roll call with Jai Hind
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என சொல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக மாணவர்கள் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும்.
இது வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு விஜய் ஷா கூறினார்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...