Tuesday, 5 September 2017

கணிதம், புள்ளியியல் பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணி: Statistician Medical Education Department

காலியிடங்கள்: 30

பணி: Statistician (Medicine & Homoeopathy Department)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400

தகுதி: கணிதம், புள்ளியில் துறையில் பட்டம் அல்லது பொருளாதரத்தில் புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்று மருத்துவம் அல்லது புள்ளியியில் துறையில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.150. ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.150.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.10.2017

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_20_NOT_EN_Statistician.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 🌈

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...