Wednesday, 27 September 2017

மாவட்ட பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்


Home
 இரண்டாம் பருவத்துக்கான, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. அதில், தற்போது முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 4 முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் எண்ணிக்கை குறித்து, தேவைப்பட்டியல் பெறப்பட்டிருந்தது.
அதன்படி, நோடல் (புத்தகம் அனுப்பப்பட்ட பள்ளி) பள்ளிகளுக்கு, புத்தகம் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டன. அங்கிருந்து, தலைமை ஆசிரியர்கள், ஓரிரு நாட்களில், தங்கள் புத்தகங்களை சேகரித்து வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளில், கட்டாயமாக மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...