Wednesday, 30 August 2017

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தனித் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை www.dge.tn. gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டு, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் வியாழக்கிழமை (செப்.7) மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுந்த இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
சிறப்பு அனுமதித் திட்டம்: மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் செப்.11, 12 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125. இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675 பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித் தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தாற்காலிகமானது தான் எனவும் தனித் தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...