இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சார்பில் 31 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.
வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது.*
*ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.*
*இறுதிகட்ட பணியான 29 மணிநேர கவுண்ட்டவுன்; இன்று (புதன்கிழமை) பகல் 2 மணிக்கு தொடங்கியது. 31 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நிறைவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.*
*பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்
No comments:
Post a Comment