200 நோட்டு இன்று வெளியிடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதிய 200 நோட்டு ஆகஸ்ட் 25ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. மகாத்மா காந்தி வரிசையிலான இந்த நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இருக்கும். மகாத்மா காந்தி படம் இடம் பெற்றிருக்கும். பின்புறம் நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்களில் ஒன்றான சாஞ்சி ஸ்தூபி பொறிக்கப்பட்டிருக்கும். அடர்த்தியான மஞ்சள் நிற பின்னணி கொண்டதாக இருக்கும். 200 என்பது எண்ணிலும், தேவநாகரியிலும் இடம்பெற்றிருக்கும். நுண்ணிய எழுத்துக்களில் ஆர்பிஐ, பாரத், இந்தியா, 200 ஆகியவை இருக்கும். பாதுகாப்பு இழையில் ஆர்பிஐ, பாரத் என எழுதப்பட்டிருக்கும். நோட்டை வெவ்வேறு கோணங்களில் அசைத்து பார்க்கும்போது இழையிலுள்ள நிறம் பச்சையில் இருந்து நீல நிறமாக மாறும். 200 என்ற எண்ணிற்கு முன்பு ரூபாய் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதுபோல் அசோக தூண், நீர் எழுத்துக்களில் மகாத்மா காந்தி உருவம் என வழக்கமாக பிற ரூபாய் நோட்டுகளில் உள்ள அம்சங்களும் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.
புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...
-
: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி ஆகியவற்றுக்காக தமிழகம் முழுவதும் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்க...
-
TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி | கல்விச் செய்தி
No comments:
Post a Comment