Tuesday, 29 August 2017

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்


பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஆக.30) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளன. 
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூலை 25-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 
நிரந்தர பதிவெண் வழங்கப்பட்ட தேர்வர்கள், அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்ற சிறப்புத் துணைத் தேர்வில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 
இதர தேர்வர்களுக்கு ஜுன், ஜுலை மாதங்களில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (மறுகூட்டல், மறு மதிப்பீடு உள்பட) வழங்கப்படும். இந்தச் சான்றிதழை புதன்கிழமை (ஆக.30) முதல் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...