Thursday, 24 August 2017

சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு


வயது உச்சவரம்பு நீக்கம் காரணமாக, மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு இந்த ஆண்டு 13,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களைவிட இரு மடங்கு அதிகம் என சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்படிப்புகளில் சேர வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து ரிஷப் துகால் மற்றும் ஏஎன்ஆர் ஆகிய மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய பார் கவுன்சிலின் வயது உச்ச வரம்பு நிர்ணய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
இதன் காரணமாக, சட்டப் படிப்புககளில் சேர வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்வது நாடு முழுவதும் ரத்தானது.
இதனடிப்படையில், தமிழகத்திலும் 2017-18 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை வயது உச்சவரம்பின்றி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இதுவரை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புகள், மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு ஆகியவற்றுக்கான சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 7 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான சேர்க்கை செப்டம்பர் 2 ஆவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கு 13,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், வயது உச்ச வரம்பு நீக்கம் காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிமானோர், மூன்றாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு 6 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். தற்போது 13,500 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருக்கின்றனர் என்றனர்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...