10 ஆண்டுகளாக பாட திட்டத்தை மாற்றாததே, நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் குறித்து கிருத்திகா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு பாட திட்டத்தையும், கற்பிக்கும் முறையை மாற்றாதது ஏன்? நீட் தேர்வை மாநில பாட திட்ட மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு பாட திட்டத்தையும் கற்பிக்கும் முறையையும் மாற்றாததும், காரணம்.சிபிஎஸ்இ பாட திட்ட கேள்விகளை மாநில பாட திட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்.
சிபிஎஸ்இயை தேர்வு நடத்தும் நிறுவனமாக நியமித்ததும் தான் இந்த நிலைக்கு காரணம். சிபிஎஸ்இ உருவாக்கும் கேள்விகளை மாநில பாட திட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் . மருத்துவ படிப்பில்பெற்றோரும் மாணவர்களும் விரக்தி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பாட திட்டத்திற்கும், மாநில பாட திட்டத்திற்கும் வேறுபாடு உள்ள நிலையில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் எவ்வாறு சாத்தியம். தேர்வு நடத்தவும், கேள்வித்தாள் தயாரிக்கவும் நடுநிலையான அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.
நீட் விவகாரத்தில் மாநில அரசை மட்டும் குறை சொல்ல முடியாது. அனைத்து முயற்சிகளையும் எடுத்த மாநில அரசு பாராட்டுக்கூரியது. அனைத்து கட்சியினரும் நீட் விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளனர். தற்போதைய ஆசிரியர்களில் பலர் லெட்டர் பேடு கல்லூரிகளில் இருந்து பணிக்கு வந்தவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment