Monday, 2 October 2017

பள்ளிகளின் வாரலாற்றுத் தகவல்கள்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளின் வரலாறு, விழாக்கள் சார்ந்த குறிப்புகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு, சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு, பிரத்யேக இணையப்பக்கம் அமைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில், தகவல்களை உள்ளீடு செய்யும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக, மாவட்ட வாரியாக, காலஅவகாசம் அளித்து, தகவல்களை திரட்டி, புகைப்படங்களும், உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. அதிக பள்ளிகள் கொண்ட, மாவட்டங்களின் பட்டியலில் கோவைக்கு முக்கிய பங்குண்டு.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை, முன்னாள் முதல்வர்கள் பார்வையிட்ட பள்ளிகள், அறிஞர்கள், கல்வியாளர்களின் வருகை சார்ந்த குறிப்புகள், அரிய புகைப்படங்கள், குறிப்பேடுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுப்பாக்கி, இணையதளத்தில் பதிவேற்றும் வகையில், தயார் நிலையில் வைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ’கோவை மாவட்டத்தில், வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிகள், தொன்மையானவை என இரண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 12 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை தவிர, அனைத்து பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், மாறுபட்ட கற்பித்தல் முறைகள், இணை செயல்பாடுகளை தகவல் தொகுப்பாக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
’பள்ளிக்கல்வித்துறையின், தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கேட்கும் போது, தகவல்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படும்’ என்றனர்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...