’துாய்மை பாரதம்’ திட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து சேகரித்தல், கழிப்பறை கட்டிக் கொடுத்தல், பொது இடங்களை சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வரும், 2019, அக்., 2ல் ’துாய்மையான இந்தியா’ என, நம் நாட்டை பிரகடனப்படுத்த, பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக, அனைத்து அரசு துறைகள் மூலமாகவும், துாய்மையை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ - மாணவியருக்கு குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் இடையே குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. தமிழக அளவில், 40 பல்கலைகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., - பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் விஷ்ணு தயாரித்த குறும்படம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.
இதை கவுரவிக்கும் வகையில், டில்லி விஞ்ஞான் பவனில் நாளை மறுதினம் (அக்., 2) நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தனது கரங்களால் மாணவருக்கு விருது வழங்குகிறார்.
மாணவன் விஷ்ணு தயாரித்த குறும்படத்தில், வீதியில் குப்பை பரவிக் கிடக்கிறது; தொட்டி சிறிது துாரத்தில் உருண்டு கிடக்கிறது. அவ்வழியை பலரும் கடந்து செல்கின்றனர். யாரும் குப்பையை பொருட்படுத்த வில்லை.
அவ்வழியாக வரும் இளைஞன், தனது பேண்ட்-ஐ மடித்து, தனி ஒருவனாக நின்று, தொட்டியை நிமர்த்தி வைத்து, குப்பையை பெருக்கி, அதில் போடுகிறார். அப்பகுதியை சிறிது நேரத்தில் சுத்தப்படுத்தி, சினிமா போஸ்டர் வாங்கி, அதன் பின்புறத்தில், ’குப்பையை தொட்டியில் போடவும்’ என, எழுதி ஒட்டுகிறார்.
இப்படி இளைஞர்களால் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார், விஷ்ணு. இதற்காகவே இவருக்குகிடைத்துள்ளது இந்த அங்கீகாரம்