Sunday, 20 May 2018

தமிழ்நாடு முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின


முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின

medicine
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான  முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் 14 இடங்கள் நிரம்பின.
எம்.டி., எம்.எஸ்., எம்.டிஎஸ். ஆகிய முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 39 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்ளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 23 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கலந்தாய்வில் 19 பேர் பங்கேற்றனர். 
கலந்தாய்வின் முடிவில் 14 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். 5 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை. 
மீதம் உள்ள 25 இடங்கள் அனைத்துப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கலந்தாய்வில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (மே 20) நடைபெற உள்ளது. காலை 9, 11 பிற்பகல் 2 என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 1344 வரை, நீட் தேர்வு மதிப்பெண் 925 முதல் 591 வரை பெற்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டு ஆன்லைன் பதிவு துவக்கம்

காரைக்குடி: பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.நடப்பாண்டில், 18-ம் தேதி முதல், ஜூன் 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரியில் நடக்கிறது.பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறியதாவது:ஆன்லைனில, www.accetlea.com என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், 300 ரூபாய்க்கு வங்கி வரைவோலையை, செயலர், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை, காரைக்குடி என்ற முகவரிக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.விண்ணப்பித்த பிறகு, 10-ம் வகுப்பு, பட்டயபடிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ், முதல் தலைமை பட்டதாரி சான்றிதழ் நகல், ஜாதி, இருப்பிட சான்றிதழ், வங்கி வரைவோலையை மேற்கண்ட அழகப்பா பல்கலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை பிரிவுக்கு வருமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...